நான் பெண்மக்களின் தந்தை !

 

நான் பெண்மக்களின் தந்தை !

 

-ஏம்பல் தஜம்முல் முகம்மது

 

 

அன்னையர் காலடியில்

அடைய அரும் சொர்க்கத்தை

முன்னிறுத்திக் காட்டியஎம்

முஹம்மதுவே நாயகமே !

 

உற்றாரில் உறவினரில்

ஊருலகில் தாய்தானே

முற்றமுதற் சுற்றமென

முன்மொழிந்த நாயகமே !

 

பெண்மகவைப் பெற்றதுடன்

பேணிவளர்த்(து) ஆளாக்கும்

புண்ணியத்தார் சொர்க்கம்

புகுவர் என்ற நாயகமே !

 

பெண்ணிற்கும் கல்வி

பெறுவதொரு கடமையென

மண்ணுலகில் முன்னுரைத்த

மாமணியே , நாயகமே !

 

விதவையெனவே மக்கள்

வெறுப்பவரை அன்னையராய்

மதிப்பளிக்கச் செய்தபுது

மாண்பாளர் நாயகமே !

 

அமல்களுக்கு நற்கூலி

ஆணெனினும் பெண்ணெனினும்

சமம் என்றவரலாற்றைச்

சாதித்த நாயகமே !

 

மண்ணிற் புதைத்தவர்க்கு

மத்தியிலே, நான்தந்தை

பெண்மக்களுக் கென்றே

பெருமைகொண்ட நாயகமே !

 

 

 

( இனிய திசைகள் – ஏப்ரல் 2015 இதழிலிருந்து )

Tags: , , ,

Leave a Reply