நானு அவனல்ல அவளு – திரையிடல் & கலந்துரையாடல்

நானு அவனல்ல அவளு – திரையிடல் & கலந்துரையாடல்

படச்சுருள் LGBTQ சிறப்பிதழ் விமர்சனக்கூட்டம்
07-01-2018, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
 
பிரசாத் லேப் 70 MM திரையரங்கம், சாலிகிராமம்.
 
சிறப்பு விருந்தினர்: இயக்குனர் B.S. லிங்கதேவாரு
நண்பர்களே நடிப்பு மற்றும் மேக்-அப்பிற்கான தேசிய விருது பெற்ற கன்னடப்படமான நானு அவனல்ல அவளு திரைப்படம் சென்னையில் எதிர்வரும் ஞாயிறு அன்று தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் “நான் வித்யா” என்கிற லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையை தழுவி எடுக்கப்பட்ட படம். இதில் படத்தின் இயக்குனர் பங்கேற்கிறார். திரையிடலுக்கு பின்னர் இயக்குனருடன் கலந்துரையாடலும் நடைபெறவிருக்கிறது. தவிர படச்சுருள் நவம்பர் மற்றும் டிசம்பர் இதழ்களான LGBTQ சிறப்பிதழின் திறனாய்வுக்கூட்டமும் நடைபெறவிருக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் படிமை மாணவர்கள் படச்சுருள் சார்ந்த தங்கள் விமர்சனக்கட்டுரைகளை முன்வைப்பார்கள். LGBTQ சமூகம் சார்ந்த ஒரு விரிவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கும் இந்த திரையிடல் மற்றும் திறனாய்வு கூட்டத்தில் நண்பர்கள் திரளாக பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Tags: , ,

Leave a Reply