நம்ம ஊரு பிரமுகர் அறிமுகம் : லயன் கே.எஸ். காஜா மொகிதீன்

Lnkaja

 

பெயர் : கே.எஸ். காஜா மொகிதீன்

பிறந்த தேதி : 05 பிப்ரவரி 1970

பெற்றோர் : சம்சுகனி ( வேலாங்குளம் ) – உம்ம சலிமா

கல்வி : எட்டாம் வகுப்பு

மூன்றாம் வகுப்பு முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியில் சரஸ்வதி ( க/பெ. சதாசிவம் – உடற்பயிற்சி ஆசிரியர் )  ஆசிரியையிடம் பயின்றவர்

1983 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு வரை சென்னையிலும் இடையில் ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியிலும் சில மாதங்கள் பயின்றார்.  ஏழாம் வகுப்பினை ஆர்.பி.ஏ.எல்.சி. உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

இவருடன் சேர்த்து உடன் பிறந்த ஆண்கள் 4 பெண்கள் : 3

தொழில் :

இவரது தந்தை 1967 ஆம் ஆண்டு முதல் சென்னை புதுப்பேட்டையில் கே. சம்சுகனி & சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந்நிறுவனத்தில் தனது தொழில் பணியினை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து 2002  ஆம் ஆண்டு மதுரையில் தொழிலை துவங்கி நடத்தி வருகிறார்.  கே.எஸ்.கே. ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஹோட்டல் பிலால் ஏ/சி உணவகத்தையும் நடத்தி வருகிறார்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் இந்த உணவகம் இருந்து வருகிறது.

2011 ஆம் ஆண்டு மலேசியாவின் சபாவில் உணவகத்தை தொடங்கியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு திருச்சியில் மேன்சன் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

திருமண நாள்   : 7 ஜூலை 1994

தொடர்பு எண் :    99 449 42287

மின்னஞ்சல் : kskksk2012@gmail.com

 

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் மதுரை கிளை நிர்வாகக்குழு உறுப்பினராகவும், மதுரை மோட்டார் உதிரி பாகங்கள் சங்க துணைச் செயலாளராகவும், மதுரை லயன்ஸ் விக்டரி கிளப்பின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வரும்  லயன் கே.எஸ். காஜா மொகிதீன் அவர்கள் தொழில்துறையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்தி ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் துபாயில் 20.12.2013 வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதுவை சங்கமம் 2013 ல் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

 

 

 

Tags: , , ,

Leave a Reply