நமது புனித பூமி

நமது புனித பூமி

சி. ஜெயபாரதன், கனடா

இந்த பூமி நமது
இந்த வானம் நமது
இந்த நீர்வளம்  நமது
முப்பெரும் சூழ்வளத்தை
தூயதாய் வைப்பது நமது
ஓயாக் கடமை.

கல்தோன்றி மண் வளமாகிப்
புல்தோன்றிப் பூ மலர
புழுக்கள் நெளிய நீர்வளம்
எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன்
தானாக நீர் வெள்ளம்
மீன்வளம் பெருகிய தெப்படி ?
மீனினம் மானுடம்
ஆனதெப்படி ?
வெப்ப அழுத்த வாயுக்கள்
வெடித் தெரிந்து
நீர்த் திரவம் சேர்ந்ததா ?
சூரியக் கதிரொளி மின்னலில்
வாயுக்கள் சேர்ந்தனவா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம்
வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை
தண்ணீர் ஆனதா ?
சுவைநீர் உப்புநீர் ஆன தெப்படி ?
கடல்நீரைக் குடிநீர் ஆக்கு !
மழைநீரை ஏரியில் சேமித்திடு  !
நீர்மயம் எப்புறம் இருப்பினும்
தூய நீர் அருந்தப் பூமியில்
துளி நீரிலை !
மண்டினி ஞாலத்தில்
உண்டி உயிர் கொடுத் தாலும்
குடிநீர் இல்லையேல்
முடிந்திடும்  ஆயுள்  !

+++++++++++

Leave a Reply