நடிகை ஹன்சிகா 23- வது குழந்தையைத் தத்து எடுக்கிறார்

hansikaநடிகை ஹன்சிகாவுக்கு 9–ந்தேதி பிறந்த நாள். ஏற்கனவே அவர் 22 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். பிறந்த நாளையொட்டி, இன்னொரு குழந்தையையும் அவர் தத்து எடுக்கிறார். புற்று நோயாளிகளின் செலவையும் அவரே ஏற்கிறார்.பிறந்த நாள்நடிகை ஹன்சிகாவுக்கு 9–ந்தேதி 21 வயது நிறைவடைந்து, 22–வது வயது பிறக்கிறது. ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். கடந்த பிறந்த நாளின்போது அவர் 2 குழந்தைகளை தத்து எடுத்தார். இதுவரை 22 குழந்தைகளை அவர் தத்து எடுத்து வளர்க்கிறார்.மும்பையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், அந்த குழந்தைகள் வளர்ந்து வருகின்றன
.
23–வது குழந்தை

இந்த பிறந்த நாளையொட்டி, இன்னொரு குழந்தையையும் தத்து எடுக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இது, அவருடைய 23–வது தத்து குழந்தை.மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 30 நோயாளிகளுக்கான மருத்துவ செலவுகளை ஏற்கனவே ஹன்சிகா ஏற்றுள்ளார். வருகிற பிறந்த நாளின்போது, மேலும் 10 நோயாளிகளுக்கான செலவை ஏற்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

நன்றி :- தினத்தந்தி, 04- 08 – 2013

 

Tags: , , ,

Leave a Reply