நகைச்சுவை

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி….

தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே..
நகை சுவையினில் சிவந்தன
நன் மக்கள் வதனங்களே….
அன்பின் வழி ஊற்றாய்,
புன்னகை மெருகேற்றும்..
தங்க குணம் அழகாய் உயர்ந்தேற்றும்…
இதுவே நகை சுவை யாளர் சேவையாகும்!
உலக நகை சுவை யாளர் சங்கமாகும்!
விண்ணிலே நகை சுவையால் வெடிக்கும் சிரிப்பிலே,
கண்ணிலே நீர் பெருகி கருணை சுரக்குமே,
மண்ணிலே வாழுவோர்க்கு நகைப்பின் மூலமே.
பொன்னைப் போல் புடம் போட்டு தரத்தை    உயர்த்துமே,
இது மன புண்ணை ஆற்றுகின்ற மருந்தல்லவா….
மன புண்ணை ஆற்றுகின்ற மருந்தல்லவா–தீய
பினக்கத்தை நீக்கித் தரும் இனக்கமல்லவா,
புன்னகையால் அல்லவா,
                     [அன்பின் வழி ஊற்றாய்]
அகந்தையை அகற்றுகின்ற அருமை புன்னகை,
ஆனவ கெர்வத்தை போக்கிடும் நன்னகை,
சுருக்க, பெருக்கத்தை நீக்கிடும் மென்னகை,
இருக்க சிருமை குணம் அழிக்கும் தன்னகை,
இது அரக்கத்தை விலக்கித் தரும் சாந்தியல்லவா….
அரக்கத்தை விலக்கித் தரும் சாந்தியல்லவா–ஈவு
இரக்கத்தை துலங்கச் செய்யும் மகிமையல்லவா..
நல் சிரிப்பால் அல்லவா,
                    [அன்பின் வழி ஊற்றாய்]
என்னங்கள் ஒருமிக்கும் நகைப்பே தியானமே,
கன்னங்கள் அசைப்பில் முக பயிற்சி காணுமே.
என்னில்லா கவலைகளை விரட்டி ஓட்டுமே,
தின்னமாய் கடுங்கோபம் தனித்து காட்டுமே,
இது மானிடர்க்கு மட்டும் கிட்டிய சிரிப்பல்லவா….
மானிடர்க்கு மட்டும் கிட்டிய சிரிப்பல்லவா–மற்ற
உயிர் இனங்கள் பெற்றிடாத சிறப்பு அல்லவா..
புன்னகையே அல்லவா,
                   [அன்பின் வழி ஊற்றாய்]
 Vnr.m.syed hussain
   055 490 8382
hussain_vnr@yahoo.com
Tags: ,

Leave a Reply