தொழில் – பயணிகள் படகு சவாரி

தமிழக இஸ்லாமிய மக்கள்  வேலை செய்வதை விட தொழில் முனைவர்களாக இருக்கவே முயலுவார்கள் இதை கண்கூடாக பார்த்து இருப்போம், சில நேரம் வேலை பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டி இருந்தாலும், அடைந்த  பொருளாரத்தினை கொண்டு ஏதேனும் சிறிய அளவினாலும்  தொழில் புரியவே ஆசைப்படுவார்கள். ஆனால் பார்த்தோம் எனில் பெரும்பாலான தொழில்கள் தங்களுக்கு தெரிந்த பெட்டிகடை மற்றும் பலசரக்கு அல்லது சிறிய அளவு முகவர்களவே இருந்து வருகின்றனர்.

இன்றைய கால கட்டட்த்தில் நண்பர்கள் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து கொண்டும் இருக்கின்றனர். இவைகளை விடுத்து வெளிவரவோ அல்லது வேறு தொழில் புரியவோ முயலுவதில்லை காரணம். முதலீடு போய்விடும் என்ற பயமும் அல்லது தொழில் முறிந்து விட்டால் சுற்றம் பார்க்கும் ஏளன பார்வையும் அச்சம் கொள்ள வைத்து விடுகின்றது, உடலில் வலிமை இருந்தாலும் மனதில் தோன்றும் அயர்ச்சி உடலையும் சோர்ந்ந்து வைக்கின்றது. என்வேதான் நீண்ட நாட்களுக்கு  சமூகத்திற்க்கு மாற்றம் தரும் வேறுவிதமான தொழில்களில் நாட்டம் இல்லாமல் தமிழக முஸ்லீம்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றது.

எனவே சமீபத்தில் கேள்விபட்டு இருக்கலாம் தமிழக அரசு சுற்றுலாத்துறையில் அதிகளவில் முயற்ச்சி எடுக்கின்றது அந்த வகையில் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பவும் சமூகத்தில் உயர்வினையும் அளிக்கும் தொழில் செய்யலாம்,  ஹெலிகாப்டர் பயணத்தினை அறிமுகம் செய்ய முயற்ச்சித்து வருகின்றது. ஆனால் அது பெரிய முதலீடு அளவும், நிர்வாக சிக்கலும் உள்ளதால் அதே பாணியில் உள்ள  கீழ்கண்ட துறையினை தேர்தெடுக்கலாம்.

பயணிகள் படகு சவாரி.

சிறு வயது குழந்தைகள் முதல் வயதில் முதியோர் வரை மனதில் கிளர்ச்சியினை ஏற்படுத்தவள்ளது இந்த கடல் படகு பயணம்.

இத்துடன் இணைத்து உள்ள படகு மொத்த சிலவு  +  நிர்வாக அமைப்பின் முறையும் முதலீடு  வங்கியில்  கடனாக பெறுவதாக இருந்தால்  ஒன்றுக்கு பேர்பட்ட தொழில் முனைவோர் இனைந்து செயல் படுத்தாலாம், குறுகிய காலகட்டதில் கடன் அடைத்து தொழிலில் அபிவிருத்தி அடையலாம்.

முதலில் தமிழக + இந்திய சுற்றுலாதுறையின் அனுமதி பெறவேண்டி குறிப்பிட்ட  முகவரிக்கு  தொழில் தொடங்க Projection Report தயார் செய்து அனுப்பிவைக்க வேண்டும் அது தொடர்பக நீங்கள்  தொழில் முனைவோர் ஆணையதினை அணுகி அவர்கள் மூலம் நீங்கள் இதை தயார் செய்து கொள்ளலாம்,  சுற்றுலாத்துறையின் புது முயற்ச்சி என்பதால் அரசு உதவி மற்றும் குறிப்பிட்ட வருடத்திற்க்கு வரிவிலக்கும் பெறமுடியும்  வளர்ச்சியும்  அடைய முடியும்.

பயணியர் படகு மொதத் செலவு என்று பார்த்தால் USD 2,70,000/-  CIF

இந்திய நாணய மதிப்பில் (2,70,000 * 67 ( USD நடப்பு விற்பனை விலை )  = 1,78,20, 000  )

100 இருக்கை கொண்ட இந்த படகு மூலம் 90 இருக்கை முழுமை அடையும் ஒரு Voyage உங்கள் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு சிறிய அளவு துறைமுகம் போதும் அதில் இருந்து  உதரணத்திற்க்கு நாகப்பட்டினம் இருந்து தூத்துக்குடி என்று வைத்து கொண்டல் 96 நட்டிங்கல் தூரம் வரும், பயணக்கட்டணம் சுற்றுலா என்பதால் ஒரு பயணிக்கு ரூ 200 உள்ளூர் பயணிக்கும் (இந்திய பிரஜை) வெளிநாட்டு பயணிகள் என்றால் ( ரூ 650 ( 10 USD ) ) –  வெளிநாட்டு பயணிகளை இது போண்ற பயணம் அதிகம் கவரும். அதற்க்கு இந்திய சுற்றுலாதுறை மற்றும் தமிழக சுற்றுலாத்துறை  உதவியும் பதிவும்  செய்தும் கொடுக்கும்.

உள்ளூர் பயணிகள் விகிதாச்சர அடிப்படையில்  = 60 * 200 = 12000 . 00
சுற்றுலா பயணிகள் விகிதாச்சர அடிப்படையில் = 30 * 650 =  19500 . 00
                                                                            31500/-  Per Voyage

நாள் ஒன்றுக்கு 3 single Trip அடித்தாலே     94,500/-  பயண நேரம் மேலே குறிப்பிட்ட பகுதியாக இருந்தால் 2*2 = 4 மணிநேரம்,  காலை ( 6 to 10 ) ( 11 to  2) (  3 to  6 ) பகல் பொழுது மட்டுமே அனுமதி அளிக்கபடும்.

மாதத்தில் 20 நாட்களுக்கு  18,90,000/- ( இதில் சிறுதளவே மற்றங்கள் வரும் ஆனால் இது உறுதியான வருமானம் இது மாதத்திற்க்கு கிடைக்கும் வருமானம் வருடத்திர்க்கு பார்த்து கொள்ளவும் )    இதில் நிர்வாக சிலவு  ஆரம்ப கால வருவாய் இழப்பு தவிர்த்து 3 வருடத்தில் உங்கள் வருவாய் உயர்ந்த இடத்தில் வருவதோடு தொழில் தொடர்பன புதிய முயர்ச்சிக்கு தலைமுறையினை எடுத்துசெல்லும் எடுத்துகாட்டக இருக்கும்.

முதலீடு 1,78,20,000 / 18,90,000 =  10 மாதத்தில் சரிகட்டப்படும் உங்கள் முதலீடு.

குறிப்பு :  இத்துடன் வங்கி கடன் எடுத்தால் மாத தவணை அட்டவணை  + உதாரண படகு படம் மற்றும் கிடைக்கும் உதாரண முகவரி மேலும் தகவலுக்கு இணைய தளத்தில் அறிந்து கொள்ளவும். தனியாக இதை படித்தால் கொஞ்சம் மலைப்பக இருக்கும் உங்கள் நண்பர்களோடு உறவினர்களோடு கலந்து ஆலோசியுங்கள். வழிதெரியும்.

————————————————————————————————————————————————————————————————————————————————————————————————————

மேலும் இன்றைக்கு  தென்மாவட்டங்களை குறிவைத்து மிகப்பெரிய கடற்க்கரையினை பயன்படுத்த சுற்றுலா துறை மூலம்  மிகப்பெரிய அளவில் தொழில் மாபிய கும்பல் இறங்கி உள்ளது அது தொடர்ச்சியாகவே வழுக்கி செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலை மேம்படுத்தபட்டு உள்ளது. இது கேரள வழியாக கோவா மும்பை கடற்க்கரை வழியாக Dadra and Nagar Haveli இணைப்புதான் இது,  இது இன்னும் சில ஆண்டுகளின்  முடிவுகளில் தெரியும், சாலை வழி முடியும் போது கடற்க்கரை கிராமங்ளை குறிவைத்து காய்கள நகர்த்தப்படும் இப்படிதான் சென்னையின் கடற்க்கரை கிராமங்கள் Resorts களாக உருவடுத்துள்ளன. தொடர்ந்து செய்து வந்தால் மக்கள் எதிர்ப்புக்கு ஆளகவேண்டி வரும் என்பதால் சிறுக சிறுக செல்லரிக்கடுகின்றது.

எதிப்புகளும் எதிர்ப்புகள் குறைந்த பகுதி என்று பிர்க்கபட்டு முதலில் எதிர்ப்புகள் குறைவக  உள்ள இடத்தில் எதிர்ப்பே வரமுடியாத பகுதிகாள உருவாக்குதல் மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத பகுதிகளாக ஆக்குதல். சொல்லப்போனால் விடுதலை புலிகள் தடுப்பு என்ற பெயரில் கிழக்கு கடற்க்கரை சாலை கட்டுபடுத்தப்பட்டு  அதன் தாக்கம் இன்றும் உள்ளது. இந்த கட்டத்தில் பொருளாதார வாய்ப்பினை நாம் எப்படி அதை பயன்படுத்த போகிறோம் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்பு :  தமிழக இஸ்ல்லாமிய மக்களை பொறுத்த வரை 1970  முன்பு வரை இருந்தவர்கள் மிகுந்த தொழில் முனைவர்களாக பல நாடுகளில் இருந்து வந்துள்ளனர், ஆனால் அதற்க்கு அடுத்து வந்த தற்போதைய தலைமுறையினை பார்தோம் எனில் நம்முடைய வளர்ச்சி என்பது பொருளாரத வாழ்க்கை நிறைவு என்பது பணியினை அடிப்படையாகவும் அடிப்படை தேவையினை நிறைவேற்றி கொள்ளமட்டுமே போராட்டமாக இருந்து வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.  ஆனால் விகிதாச்சர  அடிப்படையில் பார்த்தோம் எனில் அவர்களுக்கு கிடைத்த வசதியினை விட நமக்கு 500% அதிகமாக தகவல் தொடர்புதுறை, தொழில் முனைவோர் தொடர்பு என்று ஆனால் உண்மை நிலைமை மேலே சொன்னவறுதான் உள்ள்து. ஆனால் முன்பு நம்முடைய சமூகத்தில் இருந்த ஒற்றுமையினை, நமக்கு கிடைத்த கொஞ்சம் பொருளாதர அபிவிருத்தி கொண்டே ஒற்றுமையென்னும் ஆயுதத்தினை இழந்து நிராயுபாணிய ஆகப்பட்டு  நிற்க்கின்றோம் என்பதும் உண்மை. காரணம் தெருக்கு தெருக்கு முளைத்த இயக்கங்கள் தங்களிடம் இருந்த பொருளாதர வசதியினை நோன்பு திறக்க காட்டிய முயர்ச்சியிலும், தராவிஹ் இரவு உணவு வழங்க முயர்ச்சியுளும் வீணடித்து உணவினை விணடித்து மண்ணுக்கு அனுப்பி வைத்து விட்டனர். அவர்களிடம் ஒரே கேள்வி  ஒருவார்த்தை உங்களோடு உள்ளவர்களை கேளுங்கள் நீங்கள் கொடுக்கவில்லை என்றால் எங்களால் முடியாமல் போய்விடுமா என்று இறைவனை மறந்த செயாலாக கூட்டக  நோன்பு கஞ்சி குடித்தபோது இருந்த ஒற்றுமை இன்று இப்தார் என்ற பெயரில் பல பிரிவுகளாக தங்களுடைய வலிமையினை எதில் காட்டவேண்டுமோ அதில் காட்டாமல் இருக்கின்றோம்.   மேலும் அந்த கால கட்டத்தில் அவர்களோடு உதவி புரிய சென்ற மற்ற சமூக மக்கள் இன்று அந்த அந்த நாட்டினிலேயே இன்று அசைக்க முடியாத சக்தியாக அரசியல் செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்க்கக அவர்களின் வளர்ச்சியினை கண்டு பொறாமை அல்ல போற்றாவேண்டிய கட்டத்தில் உள்ளது. ஆனால் நாமோ அந்த பொருளாதர சக்தியினை இழந்து, கல்வி அறிவினை எட்ட கனியாக்கி விட்டு  நாமோ நாம் பிறந்து வளர்ந்து நாட்டிலேயே  இன்று இடஒதுக்கிட்டு கேட்டு இன்று மரியாதையோடு மதிக்க பட்ட எம்வீட்டு பெணகளை வீதிக்கு அழைத்து வந்து விட்டு விட்டோம் இதுவும் நிதர்சனமன உண்மை. மேலும் ஆங்கிலேயர்களின் ஆட்சி கால கட்டங்களில் தொழில்புரிந்து இருந்த தமிழ் இஸ்லாமிய சமூகம் பல்வேறு நாடுகளில் தொழில்முனைவோர்கள இருந்தவர்களின் தலைமுறைகள் இன்று ஆங்கிலேயர்களின் காலகட்டதில் கூலிவேலைக்கு சென்றவர்களின் நிறுவனங்களில் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர்.

Thanks  & Regards,
H.Jamal Mohamed  ( Madukkur )
Seychelles
Tags: , , ,

Leave a Reply