தைப் பொங்கல்

 

         கூட்டணி சங்கங்கள், கூட்டணி,
இயக்கங்கள்,கூட்டணி கட்சிகளை பார்த்தி-
-ருக்கின்றோம், கூட்டணியாய் வருகின்ற,
திரு நாட்களை, பார்த்திருக்கின்றோமா?
அதுதான் நம் தமிழர்களுடைய திரு நாட்க-
-ளாகிய, போகி பண்டிகை, தை பொங்கள்,
மாட்டு பொங்கள், கானும் பொங்கள் என்று,
தொடர்ச்சியாக வரும் நான்கு பெரு நாட்க-
-ளாகும்,
   ஒவ்வொரு மதத்தார்க்கும் ஒவ்வொரு
பெரு நாட்களுண்டு, ஆனால் மதத்திற்கு
அப்பார்பட்டு,மொழிக்காக,தமிழுக்காக, தமிழ்,
இனத்திற்காக,தமிழர்காக ஒட்டு மொத்த இந்த
நான்கு திரு நாட்களான பெரு நாட்களாகும்!
     போகி பண்டிகையைப் பற்றி அறிந்திருப்-
-பீர்கள் வீட்டிலுள்ள பழைய வேண்டாத அனை-
-த்தையும் வெளியேற்றி, நம் மனதிலுள்ள தீய
கசடுகள்னைத்தையும் அகற்றி தூய புதிய நற்-
-குணங்களை மனதினில் புகுத்தி இல்லங்ககளி-
-லும் புதியவைகளை வரவு செய்து பழையன
கழிதலும் புதியன புகுதலுமாய் சந்தோஷத்தின்
வரவாய் போகி பண்டிகையை கொண்டாடுகின்-
-றோம்!
     தமிழர்களின் வருட பிறப்பாம் தை மாதத்தின்
முதல் நாள் உலவர்களெல்லாம் உழுது,வயல்களில்
நாத்து நட்டு, நீர் பாய்ச்சி, விளைச்சல் கண்டு அருவ-
-டை செய்து தைமாத முதல் நாளில் தானியங்களை
முதன் முதலாய் இனிப்பிட்டு பொங்கள் செய்வதே
தை பொங்களாகும்!
      வருடத்தின் முதல் நாள் இனிப்புடன் துவங்கி
பானையில் பொங்கள் பொங்குவது போல் தமிழர்களு-
-டைய வாழ்வில் இனிமையும் மகிழ்வும் பொங்கி திளை-
த்திட வேண்டும் என்பதற்காகவே பொங்குகின்ற பொங்க-
-லாகும்! இனிப்புக்கு இனிமை செர்க்கின்ற விதத்திலே,
கரும்பை கடித்தாக வேண்டும்! கரும்பின் சுவையறிந்து-
கரும்பு திண்ண கூலியா என்ற பழ மொழியையே
உருவாகி உள்ளது!
      நம் தமிழர்களின் கருணை உள்ளத்தை பாருங்கள்
வாசலிலே போடுகின்ற அழகு கோலமும் அன்ன கோல-
-மாய் இருக்க வேண்டும் அந்த கோலத்தின் மாவை புளு,
பூச்சி,எறும்புகளாகிய உயிர் ஜீவன்கள் உண்டு பசியார
வேண்டும் எங்கின்ற நல்லுல்லத்தால் தமிழர்கள் சிறந்து
விளங்குகின்றார்கள்!
                    பொங்கள்பானையில்  மஞ்சள் கிழங்கை சுற்றி
கட்டியே பொங்கள் வைப்பார்கள் அதன் நோக்கம் மஞ்சள்,
கிழங்கு ஓர் நோய் நிவாரணியாகும் நோயற்ற வாழ்வே,
குறையற்ற செல்வமாய் வாழ வேண்டும் மன நிறைவும்,
தித்திக்கும் இனிப்பும்,ஆரோக்கிய வாழ்வும்,மண்ணின்,
மைந்தர்களாய் உலவர்களின் உழைப்பு என்றும் உயர்ந்து
நிற்கவே தை பொங்கள் திருநாளாகும்!
       பால் தருகின்ற பசுவிற்கு தாயின் அந்தஸ்த்தை
கொடுத்து கோமாதா என்று அழைக்கின்ற உன்னத
பண்பாளர்கள் தமிழர்கள். பசுக்களுக்கும்,காளைகளுக்கும்,
மாட்டு பொங்கள் வைத்து அதனை ஜோடித்து கொண்டா
-டுகின்ற நந்நல நேசத்தவர்கள் நம் தமிழர்கள்!
       மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் கானும் பொங்கள்
தன் உற்வினர்களை, சொந்த பந்தங்களை, உற்ற நண்பர்-
-களை, இல்லங்களுக்கு சென்று பாசங்களை பகிர்ந்து,
புதுபித்து,நலம் விசாரித்து மகிழ்ந்து உறவுகளை பலபடுத்தி
கொள்வதுதான் கானும் பொங்களாகும் இந்நான்கு நந்நாள்
பெரு நாட்களில் நம் தமிழர்கள் அனைவரும் வாழ்வாங்கு,
வாழ்த்துகிறோம்.
Tags: ,

Leave a Reply