தூங்கி எழுந்தவுடன் வாட்ஸ்-அப்..! ஆய்வில் தகவல்

ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், காலை தூங்கி எழுந்தவுடன், தங்களது செல்லிடப்பேசிகளில் உடனடித் தகவல்களை அளிக்கும் “வாட்ஸ்-அப்’ போன்ற சமூக வலைதளங்களைப் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவோர் குறித்து “டெலாய்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு விவரங்களை அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டு கூறியதாவது:

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் பழக்க, வழக்கங்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து 2,000 பேர் உள்பட, உலகம் முழுவதும் 30 நாடுகளில் இருந்து 49,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில், 78 சதவீதம் பேர், காலையில் தூங்கி எழுந்த 15 நிமிடங்களில் “வாட்ஸ்-அப்’ போன்ற சமூக வலைதளங்களைப் பார்க்கின்றனர். அதன் பிறகே மின்னஞ்சல், குறுந்தகவல் ஆகியவற்றைப் பார்க்கின்றனர்.
மேலும், ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்போரில் 52 சதவீதம் பேர், தினந்தோறும் உறங்கச் செல்வதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை, “வாட்ஸ்-அப்’ தகவல்களைப் பார்க்கின்றனர்.
இதுதவிர, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில், 28 சதவீதம் பேர், ஒரு நாளில் 11 முதல் 25 முறை “வாட்ஸ்-அப்’ போன்ற தகவல்களைப் பார்க்கின்றனர்.
இதேபோல, 22 சதவீம் பேர், ஒரு நாளில் 26 முதல் 50 முறை வாட்ஸ்-அப் தகவல்களைப் பார்க்கின்றனர். 17 சதவீதம் பேர், 51 முதல் 100 முறை பார்க்கின்றனர்.
எங்களது ஆய்வின்படி, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு, பல பொதுவான தினசரி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில், செல்லிடப்பேசிகள் பயன்படுத்துவோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: , , ,

Leave a Reply