துபை மருத்துவமனையில் ஒன்பது மாதமாக கோமாவில் இருந்து வரும் தமிழக தொழிலாளியினை காப்பாற்ற தமிழக அரசு முன் வருமா ?

DSCN0028 
துபை : துபை மருத்துவமனையில் கடந்த 2013 ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் ( வயது 41 ) தற்பொழுது கோமோ நிலையில் இருந்து வருகிறார்.
இவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்து விட்டார்.
மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமோ நிலையில் இருந்து திரும்பவேயில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் கூட்டிச் செல்ல அவரது கம்பெனிக்கு அறிவுறுத்தியுள்ளது.
கம்பெனி துபையில் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகினர்.
இவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்து சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.
எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் இவரை அனுமதிக்க உதவிட துபை ஈமான் அமைப்பு  கேட்டுக் கொண்டுள்ளது.
இப்பணியில் உதவிட விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 00971 50 467 43 99 / 00971 50 51 96 433 /info@imandubai.com  உள்ளிட்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

 

Tags: , ,

Leave a Reply