துபையில் ஆஸ்திரேலிய மருத்துவருடன் முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் சந்திப்பு

 dr abdul rahman

துபை : துபை வருகை புரிந்த தமிழகத்தின் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அவர்களை முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத் 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தார்.

மிகவும் எளிமையுடன், சமுதாய சிந்தனையுடன் காணப்பட்ட அவருடைய சந்திப்பிலிருந்து :

டாக்டர் அப்துல் ரஹ்மான் 1968 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர் வருகை புரிந்தார். 1972 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சைக்கான பயிற்சியினை மெல்போர்னில் முடித்தார். அதனைத் தொடர்ந்து லண்டன் சென்று  FRACS., மற்றும் FRCS.  ஆகிய பட்டங்களை பெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழகத்தில் பரங்கிப்பேட்டையில் பள்ளிக்கூடம், பி.எட். கல்லூரி, 24 மணி நேர இலவச மருத்துவமனை ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

கல்வியின் மூலம் சமுதாய மேம்பாடு என்ற குறிக்கோளைக் கொண்டவர். அவர் தம் பணி சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

photo (7) (1)

Tags: , , , ,

Leave a Reply