துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையில் பேராசிரியர் முகமதலி சொற்பொழிவு

துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையில் பேராசிரியர் முகமதலி சொற்பொழிவு
e1204bfb1c77664c270d1e0acc6d7171துபாய் : துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவையில் தமிழக பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகி முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார். துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. பேராசிரியர் குறித்த அறிமுக உரையினை முதுவை ஹிதாயத் வழங்கினார்.
சென்னை ஐ ஐஏஸ் அகாடமியின் செயல் இயக்குநர் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்கள் வாழ்வாங்கு வாழ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். வாட்ச் யுவர் வாட்ச் எனும் தலைப்பில் வாழ்வில் நாம் நடக்கவேண்டிய முறைகளை சிறப்புடன் எடுத்துறைத்தார். இப்படி வாழ்ந்தால் வாழ்வில் இன்னும் சிறப்பான நிலையை இறையருளால் அடையை முடியும் என்றார்.
சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த தமிழ் அறிஞருக்கான உமறுப்புலவர் விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றார். அதற்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

 

Tags: , , ,

Leave a Reply