துபாய் ஈமான் அமைப்பின் புரவலர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் வஃபாத்து

bsaதுபாய் ஈமான்  அமைப்பின் புரவலர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் வஃபாத்து
துபாய் ஈமான் அமைப்பின் புரவலரும், ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் நிறுவனருமான அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான்    07.01.2015 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா  08.01.2015 வியாழக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் 12.30 மணியளவில் வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.
அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் மறைவுக்கு ஈமான் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
கல்வியாளராக, தொழிலதிபராக, பல்வேறு சேவை நிறுவனங்களை நடத்தி வந்தவருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான், சென்னையில் உள்ள பிரபல கிரசென்ட் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஆவார். தமிழகத்தில் பொறியியல் கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1927ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் பிறந்தவரான அப்துர் ரஹ்மான், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொறியியல் கல்லூரிகள், பிற கல்லூரிகள், பள்ளிகளை நிறுவிய கல்வித்துறையில் பெரும் சேவை புரிந்தவர். அதேபோல மருத்துவமனைகள் பலவற்றையும் இவர் நிறுவியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் துபாயிலும் தனது தொழில் பங்களிப்பை அளித்தவர் அப்துர் ரஹ்மான். துபாயின் மிகப் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர். அந்த குழுமத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதி கழகம் மூலமாக பல்வேறு தான தர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார் பி.எஸ். அப்துர் ரஹ்மான்.
குறிப்பு :
துபாய் ஈமான்  அமைப்பின் புரவலர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துஆ மஜ்லிஸ் மற்றும் இரங்கல் கூட்டம் 11.01.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் இரவு 8 மணிக்கு அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ஈமான் அமைப்பின் சார்பில் நடைபெறும்.
Tags: , , , , ,
Subscribe to Comments RSS Feed in this post

One Response

 1. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

  உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

  குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை (09.01.2015) அன்று K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

  நன்றி! வஸ்ஸலாம்.

  அன்புடன்….
  மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
  மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., – பொதுச் செயலாளர்
  மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
  குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
  குவைத்.

  துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் அலைபேசி: (+965) 97 87 24 82
  மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
  இணையதளம்: http://www.k-tic.com
  யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
  முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
  முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
  நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live

Leave a Reply