துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக பிரமுகர்களுக்கு வரவேற்பு

DSC_0012 (1)துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக பிரமுகர்கள் திண்டுக்கல் ம.மு. கோவிலூர் கொழும்பு ஆலிம் பள்ளி நிர்வாகி கனி ஹாஜியார் மற்றும் மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. ஈ.எஸ்.எம். பக்கீர் முஹம்மது அவர்களின் மகன் ஆகியோருக்கு 30.10.2013 புதன்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார்.

 

துணைப்பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார்.

 

மேலும் திண்டுக்கல் ம.மு. கோவிலூர் கொழும்பு ஆலிம் பள்ளியின் நிர்வாகியும், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினருமான கனி ஹாஜியார் அவரிகளின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

 

மேலும் மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. ஈ.எஸ்.எம். பக்கீர் முஹம்மது மகன் கலீல் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அவரது தந்தையின் சமய நல்லிணக்கப்பணி குறித்து நினைவு கூறப்பட்டது.

 

ஏற்புரை நிகழ்த்திய கனி ஹாஜியார் அவர்கள் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமையில் சிறப்புற சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் ஈமான் அமைப்பின் சேவைகளைப் பாராட்டினார்.

 

நிகழ்வில் பிரைம்  ஸ்பொது மேலாளர் கம்பம் சையத் அப்தாஹிர், ஈமான் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், செயற்குழு உறுப்பினர் மணமேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ganih (1)

Tags: , , ,

Leave a Reply