துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி மற்றும் வழிகாட்டி நூல் வெளியீடு

DSC_0045துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி மற்றும் வழிகாட்டி நூல் வெளியீடு

துபாய் :
துபாய் ஈமான் கலாச்சார அமைப்பின் சார்பில் கல்வி மற்றும் வழிகாட்டி நூல் 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வெளியிட துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா பெற்றுக் கொண்டார்.
இந்த நூல் சமுதாயத்தில் கல்வி மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்பட உதவும் என்றார் லியாக்கத் அலி.
நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், கல்விக்குழு செயலாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், தகவல் தொடர்பு செயலாளர் கும்பகோணம் முகம்மது சாதிக், நலத்துறை செயலாளர் பைஸுர் ரஹ்மான், இக்பால், லெப்பைக்குடிக்காடு படேஷா பஷீர், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, கள்ளக்குறிச்சி காதர், யாகூப், கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags: , , , ,

Leave a Reply