துபாயில் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 2014

 

DSC_0066 (1)துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு 08.07.2014 செவ்வாய்க்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது.

துவக்கமாக அஜீஸுர் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். தலைவர் இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார்.

கௌரவ தலைவர் ஹெச். ஹசன் அஹமது,  என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், கவிஞர் கிளியனூர் இஸ்மத்,  முஹம்மது இஸ்மாயில், ஆடிட்டர் அமீர் சுல்தான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய தலைவராக ஏ. ஜாஹிர் ஹுசைன் தேர்வு செய்யப்பட்டார். ( புதிய நிர்வாகிகள் விபரம் விரைவில் வெளியாகும் )

செல்லின் சொல்வர் சம்சுதீன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பொருளாளர் ஏ ஜஹாங்கீர் நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்காக தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை அஹ்மது சாதிக், இம்தாதுல்லா, ஹபிப் திவான் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Tags: , , ,

Leave a Reply