துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம்

துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம்

 

துபாய் : துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம் 08.12.2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துபாய் உலக வர்த்தக மையம் அருகில் உள்ள நோவோடெல் ஓட்டலில் நடக்க இருக்கிறது.

இந்த கருத்தரங்கம் துபாய் கராமா பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ரீ எஜுகேசன் கல்வி நிறுவனத்தின் மூலம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரெசொனென்ஸ் என்ற மிகப்பெரிய பயிற்சி மைய வல்லுநர்கள் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் தொடர்பான ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.

இத்தகவலை ஸ்ட்ரீ எஜுகேசன் கல்வி மையத்தின் தலைமை செயல் அலுவலர் முனைவர் பொன் முகைதீன் பிச்சை தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும் மாணவ, மாணவியர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கலாம்.

 

Tags: ,

Leave a Reply