துபாயில் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி சொற்பொழிவாற்றுகிறார்

துபாயில் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி சொற்பொழிவாற்றுகிறார்

துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 04.11.2015 புதன்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்கள் ‘வாழ்வாங்கு வாழ’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.

பேராசிரியர் அவர்கள் இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளருமாக இருந்து வருகிறார். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முதலாமவர் ஆவார்.

சமீபத்தில் தமிழக அரசு இவரின் தமிழ்ச்சேவையினை பாராட்டி மூத்த தமிழ் அறிஞருக்கான உமறுப்புலவர் விருது வழங்கி தமிழக முதல்வரால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Tags: ,

Leave a Reply