துபாயில் பாஸ்போர்ட்டை தவற விட்ட இந்திய இளைஞருக்கு ஈமான் அமைப்பு உதவி

துபாயில் பாஸ்போர்ட்டை தவற விட்ட இந்திய இளைஞருக்கு ஈமான் அமைப்பின் உதவியால் இந்தியா திரும்ப பயண ஆவணம் வழங்கப்பட்டது

துபாய் :

துபாய் நகருக்கு உறவினரைக் காண பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் குருபிரசாத் கடந்த 27-ஆம் தேதி வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து தனது உடமைகளை எடுத்துக் கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது பாஸ்போர்ட் மற்றும் பணம் வைத்திருந்த பையை எடுக்க மறந்து விட்டது தெரிய வந்தது. உடனடியாக திரும்பி சென்று பார்த்த போது அந்த பை கிடைக்கவில்லை.

இதனையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசில் பாஸ்போர்ட் காணாமல் போன புகாரை தொடர்ந்து அவர் புதிய பாஸ்போர்ட் பெற ஜனவரி 2-ஆம் தேதி விண்ணப்பத்தை வழங்கினார்.

இது குறித்து அவர் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதுபோன்ற பாஸ்போர்ட் தொலைத்தவர்களுக்கு எமர்ஜென்சி சான்றிதழ் எனப்படும் அவசர சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஈமான் அமைப்பின் இந்திய துணைத்தூதரக பாஸ்போர்ட் துறைக்கான அதிகாரி திரு. ராஜு அவர்களை தொடர்பு கொண்டு விரைவாக அவசர சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை கணிவுடன் பரிசீலித்த அவர் அன்றைய தினமே அவசர சான்றிதழை பெற்றுக் கொள்ள உதவினார்.

இதனைப் பெற்றுக் கொண்ட குருபிரசாத் இந்திய துணைத் தூதரக அதிகாரிக்கும், ஈமான் அமைப்பினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 3-ஆம் தேதி குருபிரசாத் சொந்த ஊருக்கு திரும்பி சென்றார்.

Tags: , , , , ,

Leave a Reply