துபாயில் நடைபெற்ற தீபாவளி உத்சவ் 2012

துபாயில் இந்திய நண்பர்கள் சங்கம் தீபாவளி உத்சவ் 2012 எனும் சிறப்பு நிகழ்ச்சியினை 02.11.2012 வெள்ளிக்கிழமை ஜே.எஸ்.எஸ். பள்ளியில் வெகு சிறப்பாக நடத்தியது.

இந்திய நண்பர்கள் சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா விழாவினை துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் தீபாவளி உத்சவ் நிகழ்ச்சி வேற்றுமையில் ஒற்றுமையினைப் பறைசாற்றுவதாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்தியத் திருநாடு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கலையில் முன்னணியாகத் திகழ்ந்து வரும் எனவும் குறிப்பிட்டார்.
கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கே.ஜி. ஜெயனை இந்தியன் கன்சல் ஜெனரல் சஞசய் வர்மா கௌரவித்தார்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கும் இந்தியாவின் இரும்பு மனிதன் அமந்திப் சிங்கும் கௌரவிக்கப்பட்டார்.
இந்தியாவின் பதினொன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்தின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை வேற்றுமையில் ஒற்றுமையினை பறைசாற்றுவதாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இவற்றில் பெண்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்திய நண்பர்கள் சங்கம் ரத்ததானம், கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
Tags: 

Leave a Reply