துபாயில் நடந்த இலவச மருத்துவ முகாம்

DSC_0490துபாயில் நடந்த இலவச மருத்துவ முகாம்

துபாய் : துபாய் தம்பே மருத்துவமனையில் 13.11.2015 வெள்ளிக்கிழமை மாலை இலவச மருத்துவ முகாம் நடந்தது. தம்பே குழுமத்தின் ஹெல்த்கேர் டிவிசன் துணைத்தலைவர் அக்பர் முகைதீன், பியரிஸ் கலாச்சார பேரவையின் தலைவர் டாக்டர் பி.கே. யூசுப், அப்துல் லத்திப் முல்கி உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இதயநோய், பல்மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்களும் முகாமுக்கு வந்தவர்களை பரிசோதித்தனர். முகாமில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
Tags: , ,

Leave a Reply