துபாயில் தமிழக வர்த்தக பிரமுகருக்கு பாராட்டு

36137841e5ca100bc2c643baa0fbe1a1 (1)துபாயில் தமிழக வர்த்தக பிரமுகருக்கு பாராட்டு
துபாய் : துபாயில் இனிய திசைகள் மாத இதழ் வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர் புதுக்கோட்டை அல்ஹாஜ் ஷர்புதீன் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
சென்னை ஐ-ஐஏஎஸ் அகாடமியின் செயல் இயக்குநர் அல்ஹாஜ் சேமுமு முஹமதலி அல்ஹாஜ் ஷர்புதீனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் ஷர்புதீன் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். அவரது தொண்டு தொடர இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்கு ஷர்புதீன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முபாரக் அகமது, இனிய திசைகள் மாத இதழ் ஷார்ஜா பகுதி பிரதிநிதி பொறியாளர் சாதிக் அலி, சித்தையன் கோட்டை மௌலவி முஹம்மது, பேராசிரியை ஹுமைரா பேகம், பொறியாளர் ஷபீக்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags: , , , ,

Leave a Reply