துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

Mohamed_Ali_S.M.M.துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு
துபாய் : துபாய் வருகை புரிந்த தமிழக கல்வியாளர் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளராகவும்  இருந்து வருகிறார்.
தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு எஸ்-ஐஏஎஸ் அகாடமியின் செயல் இயக்குநராகவும் இருந்து வரும் அவர் தமிழக மாணவர்கள் அதிக அளவில் ஐஏஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அமீரகத்தில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அபுதாபி அய்மான் சங்கம், அபுதாபி காயல் நலச்சங்கம், துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இவர் சமீபத்தில் 2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் உமறுப்புலவர் விருதினை தமிழக முதல்வரிடம் இருந்து அவரது தமிழ்ப் பணிக்காக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் தொடர்பு கொள்ள : 055 302 67 82 / 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Tags: , , ,

Leave a Reply