துபாயில் தமிழக கல்லூரி முன்னாள் முதல்வருக்கு வரவேற்பு

DSC_0018துபாய் : துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியின் முன்னாள் முதலவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளருமான பேராசிரியை ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹானுக்கு 09.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் அமீரக காயிதேமில்லத் பேரவை மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்தும், தாய்ச்சபையின் வளர்ச்சிக்கு பேரவையின் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவரித்தார்.

பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மகளிர் மேம்பாட்டுக்காக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை மேற்கொண்டு வரும் பேராசிரியைக்கு பாராட்டு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியையின் சேவையினைப் பாராட்டும் விதமாக நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியை தஷ்ரீஃப் ஜஹான் தன்னை கௌரவப்படுத்தியமைக்கு அமீரக காயிதேமில்லத் பேரவைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். நிகழ்வில் பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், மக்கள் தொடர்பு செயலாளர் கீழை ஹமீது யாசின், விழாக்குழு செயலாளர் இராமநாதபுரம் பரக்கத் அலி, கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ், ஊடகத்துறை செயலாளர் கும்பகோணம் சாதிக், தேரா பகுதி செயலாளர் ஷேக் சிந்தா,  அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், பேராசிரியையின் மகன் ரஸீன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், காயிதேமில்லத் பேரன் சுலைமான் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Tags: , ,

Leave a Reply