துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா

துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா

 

துபாய் : துபாய் முஸ்ரிப் பூங்காவில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா 12.01.2018 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழா சிறப்புடன் நடத்தப்பட இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட இருக்கிறது. குறிப்பாக உரியடி, கயிறு இழுத்தல், அம்பெறிதல், பலம் பார்த்தல், கல் எடுத்தல், பச்சைக் குதிரை, சில்லுக்கோடு, பல்லாங்குழி, உப்புத் தூக்கல், கிட்டிப்புள், குத்துப் பம்பரம், கோணிப்பை போட்டி, குச்சி விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற இருக்கிறது.

இந்த பொங்கல் விழாவில் பங்கேற்க விரும்புவோர் 050 9732562 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது வருகையை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: 

Leave a Reply