துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

ummjiftar2015துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

 

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி 23.06.2015 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

துவக்கமாக அஸ்பக் அகமது இறைவசனங்களை ஓதினார்.

ஏகத்துவ மெய்ஞான சபையின் மௌலானா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற நசீம் மகனுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜமாஅத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஹமது இம்தாதுல்லா, சாதிக், ஹபிப் திவான், ஜாபர் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

சம்சுதீன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

Tags: , , ,

Leave a Reply