துபாயில் எம்.பி.ஏ. ப‌ட்ட‌ம் பெற்ற‌ முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் ப‌ள்ளி மாண‌வ‌ர்

துபாய் : துபாயில் இய‌ங்கி வ‌ரும் ம‌ணிப்ப‌ல் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் 20.10.2012 ச‌னிக்கிழ‌மை காலை கிரௌன் பிளாசா ஹோட்ட‌லில் ந‌ட‌த்திய‌ ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவில் எம்.பி.ஏ. ப‌ட்ட‌ம் பெற்று முதுகுள‌த்தூருக்கு பெருமை சேர்த்துள்ளார் ப‌ள்ளிவாச‌ல் ப‌ள்ளி மாண‌வ‌ர் என். ஜ‌ஹ‌ப‌ர் சாதிக்.
இவ‌ர் முதுகுள‌த்தூர் ம‌ர்ஹூம் ந‌ஜுமுதீன் அவ‌ர்க‌ளின் ம‌க‌னாவார். துபாய் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். டிவிஷ‌னில் முதுநிலை மேலாள‌ராக‌ப் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌, ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஆலோச‌க‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் இவ‌ர‌து சிறிய‌ த‌ந்தையார் ஆவார்.

இவ‌ர் எம்.பி.ஏ. ப‌ட்ட‌த்தில் ம‌னித‌வ‌ள‌ம் குறித்த‌ சிற‌ப்புப் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவ‌ர் த‌ற்பொழுது துபாய் ஈடிஏ அஸ்கான் குழும‌த்தின் த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ப் பிரிவில் முதுநிலை சிஸ்ட‌ம் அனலிஸ்டாக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். எத்தியோப்பியா, ச‌வுதி, க‌த்தார் ம‌ற்றும் சென்னை ஆகிய‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் மென்பொருள் அமுல்ப‌டுத்துவ‌தில் முக்கிய‌ப் ப‌ங்காற்றியுள்ளார்.

1993 முத‌ல் 1996 ஆம் ஆண்டு வ‌ரை அதிராம்ப‌ட்டின‌ம் காத‌ர் மொகிதீன் க‌ல்லூரியில் பி.எஸ்.ஸி க‌ம்ப்யூட்ட‌ர் ச‌ய‌ன்ஸும், 2006 முத‌ல் 2008 வ‌ரை சென்னைப் ப‌ல்க‌லையில் எம்.ஏ. மாட‌ர்ன் அர‌பிக்கும், 2010 முத‌ல் 2012 வ‌ரை எம்.ஏ. ஆங்கில‌மும் ப‌யின்றுள்ளார்.

இவ‌ர் த‌ன‌து ஆர‌ம்ப‌க் க‌ல்வியினை சாய‌ல்குடி, முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி, ப‌ர‌மக்குடி மேல‌முஸ்லிம் உய‌ர்நிலைப்ப‌ள்ளி உள்ளிட்ட‌ இட‌ங்க‌ளில் க‌ல்வி ப‌யின்றார். அத‌னைத் தொட‌ர்ந்து வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் க‌ல்வி ப‌யின்ற‌ ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் அர‌பி ப‌ள்ளியிலும், அவ‌ர‌து தொகுதிக்குட்ப‌ட்ட‌ ஆம்பூர் ஆனைக்கார் ஓரிய‌ண்ட‌ல் அர‌பி ப‌ள்ளியிலும் க‌ல்வி ப‌யின்றார்.

அத‌னைத் தொட‌ர்ந்து ம‌துரை அமெரிக்க‌ன் க‌ல்லூரி மேல்நிலைப்ப‌ள்ளியிலும் க‌ல்வி ப‌யின்றார்.
2003 ஆம் ஆண்டு ஆர‌கிள் சான்றித‌ழும், 2008 ஆம் ஆண்டு ஐ.டி. ச‌ர்வீஸ் மேனேஜ்மெண்ட் பௌண்டேஷ‌ன் சான்றித‌ழும் பெற்றுள்ளார்.

எம்.பி.ஏ. ப‌ட்ட‌ம் பெற்ற‌ இவ‌ரை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம். அக்ப‌ர் கான், சீனிய‌ர் மேனேஜ‌ர் நிஜாமுதீன், ஐ.டி.எஸ். இய‌க்குந‌ர் கிருஷ்ண‌ச‌ர்மா, ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்திமாலா சுரேஷ், டாக்ட‌ர் ஏ. அமீர்ஜ‌ஹான், டாக்ட‌ர் ந‌சீருல் அமீன், தேமுதிக‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் சிங்கை ஜின்னா உள்ளிட்ட‌ ப‌ல‌ர் பாராட்டியுள்ள‌ன‌ர்.

Tags: ,

Leave a Reply