துபாயில் இரண்டு நாட்கள் கல்விக் கண்காட்சி

துபாயில் இரண்டு நாட்கள் கல்விக் கண்காட்சி

 

துபாய் :துபாயில் இரண்டு நாட்கள் கல்வி கண்காட்சி நடக்கிறது. இந்த கல்விக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அக்னி ஈவெண்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

துபாய் சலாஹுதீன் சாலையில் அமைந்துள்ள கிரௌண் பிளாசா ஓட்டலில் இந்த கல்விக் கண்காட்சி டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்கள் நடக்கிறது.

தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த கல்விக் கண்காட்சி நடக்கிறது. இந்த கல்விக் கண்காட்சியில் தமிழகத்தில் இருந்து விஐடி பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம், தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த வாய்ப்பினை அமீரகத்தில் வசித்து வரும் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: , ,

Leave a Reply