துணிகளில் சாயமேற்றும் பயிற்சி 28-இல் தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையம் சார்பில் துணிகளில் சாயமேற்றுதல், பிரின்ட்டிங் பயிற்சி அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்த மூன்று நாள் பயிற்சி வகுப்பில் துணிகளில் சாயமேற்றுதல், பருத்தி, பட்டுத் துணிகளில் சாயமேற்றுதல், பத்திக், டெக்ஸ்டைல் ஸ்கிரீன் பிரிண்ட்டிங், பலவண்ன பிரின்ட்டிங், பிளாக் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படும். காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் குறிப்பேடு, கையேடு, மதிய உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.1,500. மேலும் தொடர்புக்கு: 044-26263484

Tags: , , ,

Leave a Reply