தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்

தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
வண்டலூரில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு, மான்கள் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளன. இதனை காண தினமும் அயிரக்கணக்கான மக்கள் ஏராளமான ஊர்களில் இருந்து வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று செவ்வாய் கிழமை உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்ததால் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறியதாவது: ‘‘அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய் கிழமைகளில் வார விடுமுறையாகும். பண்டிகை நாட்கள் செவ்வாய் கிழமைகளில் வந்தால் மட்டும் அன்று பூங்கா செயல்படும். தீபாவளி பண்டிகைக்கு பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும்’’ என்றார்.
Tags: , ,

Leave a Reply