தில்லி தேர்தல்: வாக்களிக்கக் காத்திருந்த கலாம்!

வாக்குப் பதிவு மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், புது தில்லி தொகுதியில் உள்ள கே. காமராஜ் மார்க் வாக்குப் பதிவு மையத்திற்கு வாக்களிக்கச் சென்றார். அப்போது, வாக்குப் பதிவு மின்னணு இயந்திரத்தில் சிறிது கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், அப்துல் கலாம் தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்தார். நீண்டநேரம் காத்திருந்த அவர், பிறகு தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்றார். கோளாறான மின்னணு இயந்திரம் மாற்றப்பட்ட பிறகு வாக்குப் பதிவு மையத்திற்கு மீண்டும் வந்து தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டுச் சென்றார்.

கலாம் தவிர, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் வாக்களித்தனர். இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விக்ரம் சிங், இந்திய கப்பல் படைத் தலைவர் டி.கே. ஜோஷி, மத்திய அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Tags: , ,

Leave a Reply