தில்லியில் இம்மாதம் 30ம் தேதி எழுத்தாளர்கள் மாநாடு

ஊழல், சமூகத்தில் மகளிர், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட  பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கான சமூக எழுத்தாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நவம்பர் 30-ஆம் தேதி தில்லி இந்தியா ஹாபிடாட் சென்டரில் தொடங்குகிறது.

பி போல்டு, ஸ்டே ரியல் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கல்வியாளர் ராஜ்மோகன் காந்தி, ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங், ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரி ஜிதேந்தர் பார்கவா, முன்னாள் தூதர் பவன்  வர்மா, பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் கவுன்சிலின் உறுப்பினர் கிரண் கார்னிக் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

இம் மாநாட்டில் பத்திரிகையாளர் ராகுல் கன்வால், வி.கே. சிங்குடன் நடத்தும் நேரடி விவாதமும் இடம் பெறுகிறது.

கிரிக்கெட் இந்தியாவுக்கு என்ன செய்யும் என்ற தலைப்பில் அயாஸ் மெமோன் பங்கேற்கும் தனி அமர்வும் இடம் பெறுகிறது. மேலும், புத்தக வெளியீடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மும்பையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் லீப் வால்ட் என்ற ஊடக நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Tags: , ,

Leave a Reply