தியாகம்

இறைவன் சொல்கின்றான்,
தியாகம் செய்திடாமல்,
எளிதாக சொர்க்கத்தை,
அடைந்திட முடியாதென்று!

வீதியின் ஓரத்தில்,
கடுங்குளிரோ தேகத்தில்,
வெடவெடத்து,
பனியால் விரைத்து
வீழ்ந்து நடுங்கி,
கொண்டிருந்தது ஒரு நாய்!

வேட்டி கட்டி
சட்டையின்றி,
போர்வை மூடி,
பார்வை திறந்து,
குளிர் கண்ட நாயினை
தான் கண்டு கொண்டார்!

மூடிய போர்வையை,
நாடியே பிரித்து,
ஆடிய நாய்க்கு,
ஓடியே போர்த்தியதால்
பனியில் விரைத்தார்,
தியாகமோ அரவணைத்தது!

போர் களம்,
போர் முடிந்த களம்,
குற்றுயிராய்,
தாகத்தால் மரணத்தை,
சுவைக்க இருக்கின்ற பலர்,
தண்ணீர் புகட்டினால்,
பிழைத்து விடுவார்கள் சிலர்,
அச்சூலலில் இருந்ததோ
ஒரு டம்ளர் நீர்,
ஒருவருக்கு,
அந்நீரை கொடுத்த போது,
என்னருகில் உள்ளவர்,
மோசமாக இருக்கிறார்
அவருக்கு கொடுங்கள் என்றார்,
இரண்டாமவருக்கு,
கொடுக்க சென்ற போது,
அவரும் குடிக்க மறுத்து
அதோ அங்கே
மிக தாகத்தால் இருக்கிறார்
அவருக்கு கொடுங்கள் என்றார்,
மூன்றாமவருக்கு
கொடுக்க சென்ற போது
அவரோ முதல் நபரை காட்டி,
உயிர் போகின்ற நிலை,
சீக்கிரமாக சென்று
அவருக்கு கொடுங்கள் என்றார்,
ஓடோடி சென்று
நீரை புகட்ட முயன்ற போது,
உடலை விட்டு உயிர் பிரிந்தது,
உடனே அடுத்தவரை,
நோக்கி சென்ற போது,
அவருயிரும் பிரிந்தது,
மூன்றாமரையாவது,
காப்பாற்றிட சென்ற போது
அவருக்கும் அடங்கியது உயிர்
உயிர் ஊசலாடிய
அந்த நேரத்திலும்,
தனக்காக இல்லாமல்
மற்றவர்களுக்காக செய்தார்களே
அதுதான் தியாகம்!!!

m.syed hussain
Tags: 

Leave a Reply