திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ தேர்வு ! முதுகுளத்தூர்.காம் வாழ்த்து !!

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ மௌலவி உமர் ஜஹ்பர் மன்பயீ தேர்வு செய்யப்பட்டார்.

அதன் விபரம் வருமாறு :

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்வு செய்யப்பட்டனர்.

பழைய நிர்வாகக் குழுவினர் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் பழைய நிர்வாகக்குழுவின் சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக அக்குழுவினரே தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிக்க தக்பீர் முழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

திடல் பள்ளிவாசல் நிர்வாகிகள் விபரம் வருமாறு :

தலைவர் :
மௌலவி ஹாஜி முதுவைக் கவிஞர் A. உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ

உதவித் தலைவர் :
ஜனாப் . S. யாக்கூப் உசேன்

பொருளாளர் :
ஜனாப் M. தாஹிர் உசேன் சேட்

கௌரவ ஆலோசகர்கள் :
ஜனாப் K.M.C. அயிரை அப்துல் காதர்
ஜனாப் A. ஜமால் முஹம்மது

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
ஜனாப். S. தில்லாகான்,
ஜனாப். N. காதர் மைதீன்,
ஜனாப் Y. ஜலாலுத்தீன்.
ஜனாப் உ.மு. அப்துல் அனஸ்
ஜனாப் S. முஹம்மது இப்ராஹீம்
ஜனாப் S. செய்யது இப்ராஹீம்
ஜனாப் S. முஜீபுர் ரஹ்மான்
ஜனாப் M. முஹம்மது ஃபாரூக்

ஜனாப். ஏ. முஹம்மது மசூது ( முன்னாள் தலைவர் )

ஜனாப். அக்பர் அலி

ஜனாப். ஏ. அய்யூப் கான் ( 3 வது வார்டு உறுப்பினர் )

ஜனாப். முஹம்மது ஹனிஃபா ( 4 வது வார்டு உறுப்பினர் )

ஜனாப். ஜபருல்லாஹ் கான்

ஜனாப். செய்யது அலி

புதிய நிர்வாகக்குழுவினருக்கு முதுகுளத்தூர்.காம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத்தகவலை புதிய தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் அவர்கள் 03.10.2010 ஞாயிறு நள்ளிரவு தெரிவித்தார். நள்ளிரவு ஆனாலும் ஐக்கிய அரபு அமீரக, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்திற்கு இத்தகவலை தெரிவித்துள்ளது அமீரக ஜமாஅத்தினரின் மேல் அவர்கள் வைத்துள்ள நல்லெண்ணத்தையே காட்டுகிறது.

படம் :

கடந்த 2008 ஆம் ஆண்டு முதுவைக் கவிஞர் அவர்கள் திடல் பள்ளிவாசல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது அமீரக ஜமாஅத்தின் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானாவில் கௌரவிக்கப்பட்டபோது எடுத்த படம்.

Tags: , , ,

Leave a Reply