‘தாட்கோ’ திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: ‘தாட்கோ’ மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களில், பயன் பெற விரும்புவோர், விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிட மக்களுக்காக, “தாட்கோ’ மூலம், நிலம் மேம்படுத்துதல், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெட்ரோல், டீசல், எரிவாயு, சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், மருத்துவமனை, மருந்துக் கடை, கண் கண்ணாடியகம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நதி, பொருளாதார கடனுதவி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

 

இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்புவோர், http:/application.tadco.com என்ற இணைய தளத்திற்கு சென்று, ஆன்லைனில் விண்ணப்பத்தை, பதிவு செய்ய வேண்டும்.

 

பதிவு செய்யும்போது, குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதி சான்று, வருமான சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி, விண்ணப்பிக்க விரும்பும் திட்டம், திட்ட அறிக்கை சம்பந்தமானப் பதிவுகளை, அதற்கான இடங்களில், அவசியம் பதிவு செய்ய வேண்டும்.

புகைப்படத்தை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர், இன்று முதல், 22 வரை, விண்ணப்பிக்கலாம்.

 

 

Tags: ,

Leave a Reply