தற்கொலை எனும் தற்கொடை

இனிதான் புரிய இயலுமோ மாண்ட
அனிதா வழங்கிய
ஆற்றொண்ணாத் தற்கொலை
கண்ட விழிகளும்
கண்ணுறங்க வில்லையே
நீண்ட கொடுமையாம் நீட்.
உயிரைத் துறந்தாய் உழைப்பின் மதிப்பு
மயிரை விடவும்
மகாகீழ்மை ஆனதோ
தந்தை இருந்தும் தனயன் இருந்துமேன்
இந்த முடிவை எடுத்து.
ஏழைகளின் சொல்லிங்கு
ஏறுமோ நீதியில்
கோழைகளாய்ப் போன
கொடியவர் நாங்களும்
தாழுமோ இன்னும் தமிழகமும் நீட்டியே
வீழுமோ கல்வியும் வீண் .
  அதிரை.கவியன்பன் கலாம், துபை
Essar Business Solutions
POB #34722
Bur Dubai, UAE
Mobile# 0508351499
Tags: ,

Leave a Reply