தம்மாம் மாநகரில் ISF அரசியல் பயிலரங்கம்!

DSC_0292தம்மாம் மாநகரில் ISF அரசியல் பயிலரங்கம்!
சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் (ISF) கிளை நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் தம்மாம் (ISF) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாண துணைத்தலைவர் மக்தூம் நைனா தலைமை வகிக்க தம்மாம் கிளையின் பொதுசெயலாளர் ஷேக் முகைதீன் வரவேற்று பேசினார்.
கிழக்கு மாகாண பொது செயலாளர் திப்பு சுல்தான் அறிமுக உரை ஆற்றிட இன்றைய அரசியல் சதுரங்கம் என்னும் தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான் உரையாற்றினார்.
சவால்களும்,வாய்ப்புகளும் என்னும் தலைப்பில் உரையாற்றிய கிழக்கு மாகாண தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி தமது உரையின் போது:
சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்ட்ரம் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் தமது 10ஆண்டு கால ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் பறி கொடுத்த காங்கிரஸின் சந்தர்ப்பவாத போலி மத சார்பின்மை கொள்கைக்கு எதிரான மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் பரிசீலிக்க வேண்டுமென்று பேசிய அவர்,
தலித் மற்றும் சிறுபான்மை சமூக மக்களுக்கான தேசிய அளவில் இருக்கும் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் SDPI தொடர்ந்து களப்பணியாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
 கூட்டத்தில் அல்ஹஸ்ஸா,அல்கோபர்,தம்மாம்,அல்ஜுபைல்,அல்சிஹாத் பகுதிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags: , , , ,

Leave a Reply