தமுமுக ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

1898163_1007125529319400_6775029066376605316_nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.

ராமநாதபுரம் கேணிக்கரை சிட்டிசன் மஹாலில் 05-09-2015 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தமுமுக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சகோ.எம்.சாதிக் பாட்சா அவர்களின் தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட தமுமுக துணை செயலாளர்கள் சகோ.செய்யது முஹம்மது காசீம் மரைக்காயர், சகோ.சுல்தான், சகோ.ரைஸ் இபுராஹீம் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமுமுக மாநில பொது செயலாளர் சகோ.ப.அப்துல் சமது அவர்களும் மாநில தமுமுக செயலாளர் சகோ.கோவை செய்யது மற்றும் தமுமுக தென்கிழக்கு மண்டல தேர்தல் அதிகாரி சகோ.வாணி முஹம்மது அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

முன்னதாக இக்கூட்டத்தை மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.

முதலில் வரவேற்புரை நிகழ்வும், அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சியும், ஆலோசனைகளும் நடைபெற்றது கூட்ட முடிவில் அனைவரின் ஒன்றுபட்ட முடிவில்

தீர்மானம் 1.

இம்மாதம் செப்- 15 அன்று நடைபெற உள்ள அண்ணா பிறந்த தினத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரியும்,

தீர்மானம் 2.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக்கோரியும்,

தீர்மானம் 3.

தமிழகத்தில் உடனே பூரண மது விலக்கை அமுல்படுத்தக்கோரியும்,

தீர்மானம் 4.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு ஆவண செய்யவேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இக்கூட்டத்தில் தமுமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வார்டு, அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தமுமுக மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நன்றி கூறினார்.

Tags: , , , ,

Leave a Reply