தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிந்து கொள்ள…

தமிழ் மரபு அறக்கட்டளை 12ம் ஆண்டினை நிறைவு செய்து 13ம் ஆண்டினில் காலடி எடுத்து வைக்கின்றோம். இந்த வேளையில் இணைந்துள்ள இப்புதியவர்களை வரவேற்பதோடு இப்புதியவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம் அதன் செய்தி ஊடகமான மின்தமிழின் நோக்கம் என்பன  தெரிந்திருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு  தமிழ் மரபு அறக்கட்டளைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.  புதிதாக இணைந்தவர்கள் இந்தத் தன்னார்வ தொண்டூழிய நிறுவனத்தின் நோக்கம் அறிந்து அதற்குத் தக்க வகையில் உங்கள் கருத்துக்களையும் மடல்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
மின்தமிழ் மடலாடல் குழு தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/) எனும் ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டூழிய நிறுவனத்தின் செய்திப் பகுதி. இங்கு தமிழ் மரபு சார்ந்த, தமிழ் பாரம்பரியம் சார்ந்த தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம்.
முதலில் மின்தமிழின் நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொளவது எவ்வகையான சிந்தனைகளை, கருத்துப் பரிமாற்றங்களை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம் என்பதை உங்களுக்குத் தெளிவாக்க உதவும்.  மின்தமிழின் நோக்கத்தை விளக்கும் பகுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழ்க்காணும் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.  வாசித்து நமது நோக்கத்தைப் புரிந்து கொள்வது உங்கள் பங்களிப்புக்களை எவ்வகையில் நீங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்பதில் உதவும்.
மின்தமிழ் புதிய உறுப்பினர் பதிவு: தெரிந்து கொள்ள வேண்டியவை
Why do you want to join MinTamil?
இந்தத் தொண்டூழிய நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் மரபு சார்ந்த தகவல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.  த.ம.அறக்கட்டளையின் வலைப்பக்கத்தை அதிலுள்ள தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக உங்களுக்குச் சில குறிப்புக்கள் :
இந்தக் கீழ்க்காணும் இரண்டு பகுதிகளும் தமிழ் மரபு அறக்கட்டளை தோற்றுவிக்கப்பட்டதன் காரணத்தை விளக்குபவை.
அடுத்து நமது தகவல் வங்கி. இது http://www.tamilheritage.org/thfcms/ முகவரியில் உள்ளது. இதில் நமது செய்திகள், நிகழ்வுகள்,  பேட்டிகள், வெளியீடுகள் ஆகியவை இணைக்கப்படுகின்றன.  முகப்பு மற்றும் வலது பக்கத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இப்பகுதியை இதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்வையிடலாம்.
அடுத்ததாக http://www.tamilheritage.org/old/index.html –  இது நமது ஆரம்ப வெளியீடுகள் அடங்கிய பகுதி. பற்பல தகவல்கள், வெளியீடுகள் இங்கு உள்ளன.
அடுத்து  http://www.heritagewiki.org . இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி. இங்கு த.ம.அறக்கட்டளை நண்பர்கள்  தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகளை இணைத்து வருகின்றனர்.
மேலும்:
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html – தலபுராணங்கள் திட்டம்
http://video-thf.blogspot.com/ – நிகழ்கலை
http://voiceofthf.blogspot.com/ – மண்ணின் குரல்
மின்தமிழில் தரக்கட்டுப்பாடு மிக முக்கியம். ஆக, உங்கள் கலந்துரையாடல்கள் சமய பேதத்தை வளர்ப்பதாகவோ, சாதி பேதத்தை வளர்ப்பதாகவோ, பெண்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்ததாகவோ, பிற இனத்தவரையும் மொழியினரையும், கடவுள் வடிவங்களையும் இழிவு படுத்துவதாகவோ, ஆபாச விஷயங்களை உள்ளடக்கியதாகவோ இருப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.  அதே போல ஒரு குறிப்பிட்ட நபரை/நபர்களை தாக்குவதற்காக இந்த மடலாடற் குழுவை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
அதே போல தமிழில் படைப்புக்களை வழங்குபவர்கள் கொச்சையான பேச்சுத் தமிழ் கலக்காமல் நல்ல தமிழில் எழுதும் முறையை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். ஏனென்றால் இங்கு வெளியிடப்படும் தகவல்களை ஆரம்ப பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், தமிழில் ஆர்வம் காட்டும் பிற இனத்தவரும் வாசிக்க விழையும் போது அது மொழிச் சிக்கலை அவர்களுக்கு உருவாக்கும்.
மின்தமிழ்,  தமிழர் வாழ்வியலில் அடங்கியுள்ள அனைத்து விஷயங்களையும் ஆய்வதில் ஆர்வம் கொண்டுள்ளது.  தமிழர் வாழ்வியல், பண்பாடு கலாச்சாரம்,  வாழ்க்கை முறை, சமயம், மொழி, வட்டார வழக்குகள்  என பல்வேறு வகையில் கலந்துரையாடல்கள் இருப்பது நமது சிந்தனைக்கு விருந்தாக அமையும், புதியவர்களும் தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மின்தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் நீங்களும் உதவ விரும்பினால் இங்கே உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் மரபு விக்கியில் கட்டுரைகள் இணைக்கவும், கட்டுரைகள்  தட்டச்சு செய்யவும் பழம் நூல் மின்னாக்கம், புராதன வரலாற்றுச் செய்திகள்  சேகரிப்பு போன்ற பல்வேறு வகைகளில் உங்கள் பங்களிப்புக்களை வழங்கலாம்.  கேள்விகள் இருப்பின் தயங்காமல் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரை நாடுங்கள்.
மின்தமிழ் தொடர்பான விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளவும் மடலாடற் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சனைகளை தீர்க்கவும் இந்த மடலாடற் குழுவின் மட்டுறுத்துனர் குழுவினரை நீங்கள் தாராளமாக அனுகலாம்.
மின்தமிழ் மட்டுறுத்துனர் குழு
  • டாக்டர்.நா.கண்ணன்
  • சுபாஷினி ட்ரெம்மல்
  • கீதா சாம்பசிவம்
  • தமிழ்த்தேனியார் (கிருஷ்ணமாச்சாரி)
  • செல்வன்
அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]


Suba Tremmel
http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com – Suba’s Musings
http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
Tags: 

Leave a Reply