தமிழ்நாட்டில் ஒரு தொகுதிக்காக பாஜகவினர் கொடுத்துள்ள விலை அதிகமானதே!

 
நடந்து முடிந்துள்ள தேர்தலில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளும் கட்சியே அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதனடிப்படையில் தான் குஜராத்,ராஜஸ்தான்,மத்திய பிரதேஷம்,கோவா,உள்ளிட்டவைகளில் 100சதமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது.
மேற்கு வங்கம்,தமிழ்நாடு,கேரளா,ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
பீகார்,உத்திரபிரதேசம்,மஹாராஸ்ட்ரா,இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் கட்சிகள் மீதான வெறுப்பும்,
ஆம் ஆத்மி,மாயாவதி,முலாயம் சிங்,லல்லு பிரசாத் யாதவ்,ராம் விலாஸ் பாஸ்வான்,நிதீஷ்குமார் உள்ளிட்ட சக்திகள் பிரிந்து போனதும் தான் பாஜகவின் வெற்றியை தேர்தலுக்கு முன்பே உறுதி செய்தது.
ஊர் இரண்டு பட்டு போனால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பாஜகவின் வெற்றியின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்ந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மட்டுமே ஓரளவுக்கு ஆதரவை பெற்றுள்ள பாஜக அந்த தொகுதியை தனித்து நின்று வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டு,
 போலி திராவிடர்களான வைகோ,விஜயகாந்த் போன்ற ஏமாளிகளுக்கு தாராளமான பணத்தையும்,தங்களுக்கு அறவே வாக்கு வங்கி இல்லாத தொகுதிகளையும் வாரி கொடுத்து அவர்களின் வாக்குகளை கொண்டு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றி விட்டது.
தமிழ்நாட்டில் ஒரு தொகுதிக்காக பாஜகவினர் கொடுத்துள்ள விலை
அதிகமானது என்றாலும்,
 தமிழ்நாட்டிலும் தங்களின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டது மகத்தான வெற்றியல்லவா?
கீழை ஜஹாங்கீர் அரூஸி
Tags: , , ,

Leave a Reply