தமிழ்த்துளி

வாழ்க தமிழ் துளி வாழ்க,
வாழ்க தமிழ் துளி வாழ்க,
வையகமதனில் வான் புகழ் உயர்ந்தே,
மாண்புடன் மேன்மையில் வாழ்க,
வாழ்க தமிழ் துளி வாழ்க,
வாழ்க தமிழ் துளி வாழ்க,
வாழ்க செந்தமிழ் வாழ்கவே,
வாழ்க பைந்தமிழ் வாழ்கவே,
வாழ்க முத்தமிழ் வாழ்கவே…,

தமிழின் அறிஞர் திருவள்ளுவரின்
திருகுறள் அரும் தமிழ் துளியே,
பாரதியாரின் நற்றமிழ் கவியும்,
புவியினில் பொற்றமிழ் துளியே
அவ்வையாரின் அகம் மகிழ் பாடல்
அகிலத்தின் தேன் தமிழ் துளியே,
அறநாணூரும் கம்பனின் காவியம்,
அழகுரும் தீந்தமிழ் துளியே,
[வாழ்க தமிழ் துளி வாழ்க]
முத்தின் மொழியாம் தமிழை தமிழ் துளி
வித்தாய் விதைத்தது இங்கே,
அமீரகத்தில் தமிழ் பண்பாட்டை
பரவிட செய்தது நன்றே
தமிழை நிறைவாய் வளமும் நலமுடன்
வளர்த்திட்ட தமிழ் துளி வாழ்க,
தமிழை உயிரின் மூச்சாய் கொண்டு,
உயத்திட்ட தமிழ் துளி வாழ்க,
[வாழ்க தமிழ் துளி வாழ்க]

வாழ்த்தும் உள்ளங்கள்

விருதை மு.செய்யது உசேன்.
055 490 8382

Tags: 

Leave a Reply