டாக்டர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான்

டாக்டர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான்

இறைவன் அளித்த தாய்ப்பறவை

 

 

கோடான கோடி மனிதர்களுக்கு இடையே

கோடியிலே ஒருவராய்த் திகழ்ந்திட்ட திருவுளம்!

தென்கோடி தமிழகத்தின் கீழக்கரை கண்ட

மனிதருள் மாணிக்கம்!  மாசிலாத் தூயதங்கம்!!

 

தனியொரு மனிதனுக்காய் இரைதேடிப் பறக்காமல்

தன்னினம் எல்லாம்வாழ துணிந்திட்டத் தாய்ப்பறவை!

அலைகடல் மேவியன்று உடல்பொருள் ஆவிவைத்து

நகைமணி  நவரத்தின தொழில் முனைந்தோன்!!

 

வளைகுடா நாடுகளில் வலம்வந்தபோது – தன்

கிளைதனை நிறுவிடவே துபாயைத் தேர்ந்தெடுத்தான்!

விதைவிடும் இலையென விண்முட்டும் வளர்ச்சிக்கு

வித்தூன்றி வைத்தானென என்றைக்கும் வரலாறு சொல்லும்!

 

நிறைகுடம் போல்விளங்கும் நித்திலச் செல்வரிவர்

துறைதோறும் தடம்பதித்து வெற்றியின் திருமகனானார்!

இறையிடம் தான்பெற்ற செல்வங்கள் வழியாக

பல்லாயிரம் வாழ்விற்கே கலங்கரை விளக்கானார்!

 

பொன்மனச் செம்மலின் நன்மனதில் நண்பராக

புரட்சித்  தலைவருக்கே வழங்கிய வள்ளலாக

எண்ணிலாப் புகழ்ப்பயணம் இவர்தம் வாழ்விலுண்டு!

ஏற்றங்கள் பெறுவதற்கே இறைவனின் கருணையுண்டு!!

 

சொல்லிலே வடித்தாலும் சுவையான காவியம் பிறக்கும்!

நல்லவர் இதயமெல்லாம் நன்றியாய் தினம்வணங்கும்!

ஆண்டவனின் அருள்குழந்தை பி.எஸ்.அப்துல்ரஹ்மான்

அல்லாவின் அருளினால் மறுமையிலும் உயர்வடைவார்!

 

 

காவிரிமைந்தன் – M. RAVICHANDRAN

Tags: 

Leave a Reply