ஜெயலலிதா மறைவுக்கு அபுதாபி தமிழர்கள் அஞ்சலி

ஜெயலலிதா மறைவுக்கு அபுதாபி தமிழர்கள் அஞ்சலி
அபுதாபி :  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அபுதாபி தமிழ் அமைப்புகள் அஞ்சலி செலுத்தின.
அபுதாபியில் நடந்த இந்த இரங்கல் கூட்டத்திற்கு அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் ரெஜினால்ட் தலைமை தாங்கினார்.
இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் தாமஸ் வர்கீஸ், அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது , செய்யது ஜாபர், காயிதே மில்லத் பேரவை செயலாளர் லால்பேட்டை அப்துல் ரகுமான், தமுமுக செயலாளர் ஷேக் தாவூத், ஸ்ரீரங்கம் கார்த்திக் சுப்பையர், கவியன்பன் கலாம், இம்தியாஸ் அகமது, காதர் மீரான், சந்திரன், தனஞ்செயன், சர்புதீன், அன்சாரி, ரிபாயி, ஷபீக் அகமது ஆகியோர் பேசினர்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது கூட்டத்தை நெறிப்படுத்தினார்.
மறைந்த முதல்வருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
pg7

 

Tags: , , , ,

Leave a Reply