ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி, திருச்சி

ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி

காஜா நகர், திருச்சி – 620020 தமிழ்நாடு, இந்தியா

Tel : 0431 – 2420 389

Cell : 94 868 15 786

E-mail : anvarululoomtrichy@gmail.com

 

அல்ஹம்துலில்லாஹ் ! நமது கல்லூரி மெளலானா முஹம்மது அப்துஸ் ஸலாம் (அரபி) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது.

நமது கல்லூரியின் பாட திட்டங்கள் & சலுகைகள்

1.தவ்ரதுத் தஃப்ஸீர் வல் ஹதீஸ் பிரிவு :

ஒரே ஆண்டில் தஃப்ஸீர் ஹதீஸின் முக்கிய கிதாபுகளை பயில்விப்பதுடன் நவீன காலத்தின்    (CHALLENGE) சவால்கள் இன்னும் பிரச்சனைகளுக்கான விளக்கங்களை பயில்வித்து, (SCIENCE) அறிவியல் ரீதியான ஆய்வுகள் இன்னும் அல்குர்ஆன், அல்ஹதீஸ் தொடர்பான விசித்திர உண்மைகளை ஆய்வு செய்து நவயுகத்திற்கு சீரிய வழிகாட்டும் பயிற்சியளிக்கப்படும்.

2.இமாமத், அழைப்பு பணி பயிற்சி பிரிவு :

இந்த பிரிவில் திருத்தமான கிராஅத் பயிற்சியுடன், இமாமத்தின் மஸாயில்களை விசேஷமாக பயில்விக்கப்பட்டு இமாமத் பயிற்சியுடன், நவீன கால தேவைகளுக்கு ஏற்ப அழைப்பு பணி பயான் இன்னும் குத்பாவின் பயிற்சியளித்து, இமாமத் பயிற்சி பிரிவில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். கணிணியில் D.C.A & D.T.P யும் கற்றுத் தரப்படும்.

3.பிலால் கோர்ஸ் :

திருத்தமாக சரியாக பாங்கு சொல்லவும், பாங்கின் சட்ட விவரங்களும், முக்கியமான சூராக்களின் நல்ல பயிற்சியும் அளித்து, அவசர நேரங்களில் தொழுகையை சமாளிக்கும் வகையில் தொழுகையின் முக்கிய மஸாயில்களை பயில்வித்து முஅத்தின் டிரைனிங் கோர்ஸ் சான்றிதழ் வழங்கப்படும். காலம் 6 மாதம்/ ஒரு ஆண்டு

4.நவ்முஸ்லிம் தீனிய்யாத் & அழைப்பு பணி கோர்ஸ் :

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள், மஸாயில்கள், இஸ்லாமிய நற்பண்புகளுடன் அழைப்பு பணி பணிகள் போன்றவைகளை பயில்வித்து தீனிய்யாத் & அழைப்பு பணி டிரைனிங் சர்டிஃபிகேட் வழங்கப்படும்.

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் மதம் மாறியதற்கான சட்டரீதியான சான்றிதழ்களுடன் விண்ணபிக்கலாம். பெண்களுக்கும் தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.

5.காலேஜ், ஸ்கூல் படிப்புடன் ஆலிம், ஹாபிள் கோர்ஸ் :

காலேஜ் ஸ்கூல்களில் 8,9,10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பகல் நேரங்களில் காலேஜ், ஸ்கூல் படிப்புகளை படிப்பதுடன் மதர்ஸாவின் பாடதிட்டங்களை மதர்ஸாவில் தங்கி படித்த வண்ணம் காலேஜ், ஸ்கூல் பரிட்சைகளை எழுதும் வகையில் வசதியும் செய்து தரப்படும்.

6.

அரபி 4 ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு அப்ஸலுல் உலமா பரிட்சை எழுதுவதற்கான வசதியும் செய்து தரப்படும்.

7.அரபி கடைசி வகுப்பில் ஸிஹாஹ் ஸித்தா பயில்வித்து மெளலவி பாஜில் ஸனது வழங்கப்படும்.

8.காரி பிரிவு :

கிராஅத் கலையின் அவசியத்தை முன்னிட்டு ஆலிம் அல்லது ஃபாஜில் அல்லது ஹாபிழ் பட்டம் பெற்ற எந்த மாணவரும் கிராஅத் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று காரி சான்றிதழ் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

9.குர்ஆன் தவ்ர் பிரிவு :

குர்ஆன் ஷரீப்பை நல்ல நினைவாற்றலுடன் தவ்ர் செய்து பக்கா செய்ய விரும்பும் நடுத்தர வயதுள்ள எந்த ஹாபிழும் இந்த பிரிவில் சேர்ந்து தவ்ர் செய்து கொள்ளலாம்.

10.பத்வா பயிற்சி பிரிவு :

பத்வா பிரிவில் பிக்ஹ் கிதாபுகளை ஆய்வு செய்து மஸாயில்களை தொகுக்கும் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும்.

 

நமது கல்லூரியில் ஆங்கிலமும், அரபிக் டைப்ரைட்டிங்கும் கற்றுத் தரப்படுகிறது. மேலும் கணிணி பிரிவில் D.C.A&D.T.P கற்றுத் தந்து அதற்கான சர்டிபிகேட்டும் வழங்கப்படுகிறது.

 

தொடர்பு முகவரி

முதல்வர்

ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி

காஜா நகர், திருச்சி – 620020

0431 – 2420389, 94868 15786

 

Tags: ,

Leave a Reply