ஜமால் முஹம்மது கல்லூரி

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி,
பல்கலைக்  கழகமாய் மாறும்!
———————————————————
இறைவன் மறைதனில்
கூறுகின்றான் ஓதுவீராக,
எழுது கோலை கொண்டு,
கற்று கொடுத்தான்!
மனிதன் அறியாததை
அறிந்து கொண்டான்!

சீன தேசம் சென்றேனும்,
சீர் கல்வி பயிலென்றார்
அண்ணல் இரசூலுல்லாஹ்!
கற்றவரே உயிருடையார்,
கல்லாதார் இறந்தோரே,
என்றார் திருவள்ளுவர்!

இன்று கலாம் கண்ட கனவை,
அன்றே கண்டவர்கள்,
ஜமால் முஹம்மது ராவுத்தர்,
காஜா மியான் ராவுத்தர்,
கனவினும் மேலாய் வென்றது,
ஜமால் முஹம்மது கல்லூரி!

கல்வியை விதைத்து,
கட்டிய அஸ்திவாரத்தில்,
உன்னத லட்சியமாய்,
உயர்ந்த மாண்பாய்,
உயிர்த்தெழுந்தது,
ஜமால் முஹம்மது கல்லூரி!

பல துறைகள் கொண்ட,
கல்லூரிகளுகிடையில்
ஒரு துறையினில்,
பல துறைகளாய்
வெற்றி கண்டது,
ஜமால் முஹம்மது கல்லூரி!

இறை அறியா,மறை அறியா,
மா நபி வழி அறியா,
குறை குட தீனோரை,
நிறை குட தீனியாத்தால்
முழு முஃமினாக்கியது,
ஜாமால் முஹம்மது கல்லூரி!

உலக கல்வியும்,
மார்க்க கல்வியுமாய்,
அறிவு ஜீவிதமாய்,
அவனியெங்கும்
பவனி வருகின்றார்கள்
ஜமால் முஹம்மது கலூரி மாணவர்கள்!

தான் கற்ற கல்வியை,
ஒப்புயர் ஒழுக்கத்துடன்,
உலகத்தாருக்கே
கற்று கொடுக்கின்ற
பேராற்றல் பெற்றவர்களாயினர்
ஜமால் முஹம்மது கல்லூரியினர்!

எதிர்காலத்தில்,
ஜமால் முஹம்மது கல்லூரி
அகிலமெங்கும் வியக்கின்ற,
உலகோறெல்லாம் கற்கின்ற,
பல் கலை கழகமாய் மாறும்
இன்ஷா அல்லாஹ்!

எதிர் பார்ப்புடன்
முதுவை ஹிதாயதுல்லாஹ்,
திண்டுக்கல் ஜாமாலுதீன்,
விருதை செய்யது உசேன்.
055 490 83 82

Tags: 

Leave a Reply