ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

ஜமால் முஹம்மது கல்லூரி (சிங்கப்பூர் கிளை) முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா இம்மாதம் நவம்பர் 22ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்: 2 பீட்டி சாலையில் உள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் மாலை ஆறு மணிக்குநிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் துவங்குகின்றது.

கல்வி என்ற தலைப்பே இவ்விழாவின் கருப்பொருளாகும். ஜமால் முஹம்மது கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். முஹம்மது சாலிஹ் தலைமையுரை ஆற்றுகிறார். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவரும், சிங்கப்பூர் பிரபல பட்டயக் கணக்காய்வாளருமான டாக்டர் எம். முஹிய்யத்தீன் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றுகிறார்.

கல்லூரியின் மேலாண்மைத் துறை இயக்குநர் டாக்டர் கே. அப்துல் ஸமது, கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் கே.என். அப்துல் காதர் நிஹால் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் தாளாளரும்,செயலாளருமான டாக்டர் ஏ.கே. காஜா நஜீமுதீன் சாஹிப், கல்லூரியின் துணைச் செயலாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முஹம்மது சாஹிப் ஆகியோர் பங்கேற்கிறார்கள். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஏ. முஹம்மது இப்ராஹிம், கல்லூரியின் கூடுதல் துணை முதல்வர் டாக்டர் எஸ். இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் படைப்பாளர் வழக்குரைஞர் எஸ். பாண்டித்துரை அவர்கள் கற்க கசடற என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

“நூருல் ஹூதா” இசைக் குழுவினர் வழங்கும்டாக்டர் நாகூர் ரூமி எழுதிய சிறப்புப்பாடல் ஒன்றும் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.இவ்விழாவையொட்டி சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான், செயலவை உறுப்பினர் ஃபரீஜ் முஹம்மது இருவரும் நிகழ்ச்சி நெறியாளர்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஜமால் முஹம்மது கல்லூரி (சிங்கப்பூர் கிளை) முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழுவினர்கள், உறுப்பினர்கள், ஒன்றிணைந்து  சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள். இவ்விழாவில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

நிகழ்ச்சிப் பற்றிய மேல் விபரங்களைwww.jmcalumni.org.sg வலைத்தளத்தில் அறியலாம். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் முன்கூட்டியே வருகைப்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னஞ்சல் முகவரி:contact@jmcalumni.org.sg அலுவலக தொலைப்பேசி எண்: 63981020 கைத்தொலைப்பேசி எண்கள்: 93868031தொடர்பு கொள்ளவும். எம்.இ.எஸ் குரூப் நிறுவனத்தினர் மற்றும் ஸாரா ஹாலிடேஸ் நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

அழைப்பில் மகிழும்,

 

நிர்வாக மற்றும் ஏற்பாட்டுக்குழு

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

Tel: 63981020 | Fax: 63981030 | www.jmcalumni.org.sg

 

IMPORTANT NOTE: JAMALIANS NETWORKING SESSION WITH OUR COLLEGE MANAGEMENT COMMITTEE MEMBERS AND FELLOW JAMALIANS WITH LIGHT REFRESHMENTS STARTS AT 4.00 PM. ALL JAMALIANS ARE REQUESTED TO BE PRESENT AT UMAR PULAVAR TAMIL LANGUAGE CENTRE, 2 BEATTY ROAD ON SUNDAY, 22 NOVEMBER 2015 AT 4.00 PM AND BE SEATED BY 5.30 PM AS OUR 5THANNIVERSARY EVENT WILL START AT 6.00 PM (SHARP) AND END AT 8.00 PM. WE THANK YOU FOR KIND CO-OPERATION AND SUPPORT TO MAKE THIS EVENT SUCCESSFUL.

Tags: , , , , ,

Leave a Reply