சௌதி அரேபிய‌ அர‌சு அழைப்பின் பேரில் சிங்க‌ப்பூரிலிருந்து புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம் மேற்கொள்ளும் முதுவை பிர‌முக‌ர்

சிங்க‌ப்பூர் : சிங்க‌ப்பூரிலிருந்து சௌதி அரேபிய‌ அர‌சின் அழைப்பின் பேரில் 20.10.2012 ச‌னிக்கிழ‌மைய‌ன்று புனித‌ ஹ‌ஜ் பய‌ண‌ம் மேற்கொள்ள‌ இருக்கிறார் முதுகுள‌த்தூர் திட‌ல் ஜ‌மாஅத்தைச் சேர்ந்த‌ ஃப‌ரீஹுல்லாஹ்.

சௌதி அரேபிய‌ அர‌சின் சார்பில் செல்லும் சிங்க‌ப்பூர் அர‌சு அனுப்பும் தூதுக்குழுவில் ப‌த்து பேர் இட‌ம் பெற்றுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ ஃப‌ரீஹுல்லாஹ் அவ‌ர்க‌ள் இட‌ம் பெற்றுள்ள‌து முதுகுள‌த்தூர் ம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் பெருமை தேடித் த‌ர‌க்கூடிய‌தாகும்.

சிங்க‌ப்பூர் பிர‌ஜை உரிமை பெற்று க‌ஸ்ட‌ம்ஸ் அலுவ‌ல‌ராக‌ப் ப‌ணிபுரிந்து வ‌ந்தாலும் தான் பிற‌ந்த‌ ஊர் குறித்து அக்க‌றையுட‌ன் விசாரித்து வ‌ருவ‌துட‌ன், முதுகுள‌த்தூர்.காம் மூல‌ம் ந‌ம‌தூர் செய்திக‌ளை தொட‌ர்ந்து தெரிந்து கொண்டு வ‌ருகிறார்.

புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம் மேற்கொள்ளும் ஃப‌ரிஹுல்லாவை முதுகுள‌த்தூர் அனைத்து ஜ‌மாஅத்க‌ள், ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் நிர்வாகிக‌ள், முதுகுள‌த்தூர்.காம் உள்ளிட்ட‌வ‌ற்றின் சார்பில் வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவ‌ரையும் த‌ங்க‌ள‌து துஆவில் நினைவு கூற‌வும் கேட்டுக் கொள்கிறோம்.

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌, ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஹெச். இப்னு சிக்க‌ந்த‌ர் அவ‌ர்க‌ள் சிங்க‌ப்பூரிலிருந்து புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம் செல்லும் அர‌சு தூதுக் குழுவில் இட‌ம் பெற்றுள்ள‌ ஃப‌ரிஹூல்லாவின் புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம் சிற‌ப்புட‌ன் அமைய‌ வாழ்த்துவ‌தாக‌க் குறிப்பிட்டுள்ளார்.

ஃப‌ரீஹுல்லாஹ், சிங்க‌ப்பூரில் ஐக்கிய‌ இந்திய‌ முஸ்லிம் ச‌ங்க‌த்தின் த‌லைவ‌ராக‌வும், இந்திய முஸ்லிம் ஃபெட‌ரேஷ‌னின் த‌லைவ‌ராக‌வும் இருந்து வ‌ருகிறார்.

இத‌ற்கு முன்ன‌ர் அர‌சு முறைப் ப‌ய‌ண‌மாக‌ அமெரிக்காவிற்கும் சென்று வ‌ந்துள்ளார்

 

For More details about Mr Farihullah

E-mail : farihullah@gmail.com

 

Born in Mudukulathur, (D O B 28 Nov 1966).

Father : Hj M A Safiullah

Mother : Syed Meeran Beevi

Sibling : 5 sisters

Attended Madrasah Classes at, Thidal Pallivasal

Educated in Muslim High School

Completed 8th standard

>> Father was operating retail trade, garments and dresses in Singapore. I came to Singapore in August 23, 1981 as a tourist and explore the opportunity of continuing education. Started education in Singapore in 1982. Completed GCE “A” level – college education in 1988.

Due to the need of concentration of family business, unable to continue my studies. In order to progress myself  did correspondence study with US institution. In 1998 got my post graduate degree MBA.

To have more exposure and community involvement change my career from business to government service. In 1995 joined Singapore Customs as Customs Officer and today Senior Customs Officers with Intelligence and Investigation Division.

Also involved in community projects such as voluntary welfare organizations and co-operative society.

As the president of United Indian Muslim association, taking charge of 2 childcare centers with the capacity of 210 students and  madarasah classes for 300 students.

As a co-operative society Board of Director managing the millions dollars of assets.

 

 

 

Tags: , , , ,

Leave a Reply