சோனை மீனாள் கல்லூரியில் கருத்தரங்கு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. வணிகவியல் துறை தலைவர் வேலவன் வரவேற்றார்.

இந்தியாவில் கூட்டுறவின் செயல்பாடுகள் குறித்து பரமக்குடி அரசு கல்லூரி வணிகவியல் துறை தலைவர் மனோகரன், உயர்கல்விக்கான வாய்ப்புகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து வணிகவியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் பேசினர்.

கருத்தரங்கில் சோனை மீனாள் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர்கள் மாணிக்கவாசகம், கருப்பசாமி, நித்யாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் திலீப்குமார் நன்றி கூறினார்.

Tags: ,

Leave a Reply