செப்.13 ராமநாதபுரத்தில் மகாகவி பாரதி விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதிநகர் ஸ்ரீதங்கம் மகாலில் மகாகவி பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது.

 இது தொடர்பாக சங்க செயலாளர் கண் மருத்துவர் பொ.சந்திரசேகரன் கூறியது: ஆண்டு தோறும் மகாகவி பாரதி விழாவை ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர்.எஸ்.விமலா வேல்முருகன் தலைமை வகிக்கிறார். ஊராட்சித் தலைவர்கள் சித்ரா.மருது, எஸ்.எம்.நூர்முகம்மது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் பாரதி படத்திறப்பு விழாவும், சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் பாரதி பாட்டரங்கமும் நடைபெறுகிறது.  “இன்னும் ஒரு முறை பிறந்து வா பாரதி’  என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. விழாவில் பாரதிநினைவு தின நாளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply