சென்னை மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலம் இடமாற்றம்

சென்னையில் மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம் எண்.15/1, மாதிரி பள்ளி சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை-6 என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது.

கடந்த 10ம் தேதி முதல் மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாக முதல் மாடி, அரசு புற மருத்துவமனை பின்புறம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply